Tuesday 12 May 2015

திரு எழுந்த சிங்கமகனே

கருவாய்...உருவாய்
கருவின் உயிராய்
கருநிறை சிற்பமாய்

திரு எழுந்த சிங்கமகனே

என் தங்கை சுந்தரியின் Sundari Manalan
மணிவயிறு உதித்த எங்கள் குலமகனே

வேண்டும் உன் போல் பிள்ளையென்று எத்தனை ஜென்ம வேள்வி தவமிருந்தால் என்தங்கை

அத்தனை தவமும் ஆனந்தம் பொங்கி கொழிக்கும் வரமாய்
வந்துதித்த செல்வ பூங்கதிரொளி நீ....

சொக்கனும் திருமாலும்
உன் அழகு கண்டு சொக்கி
படைத்த பிரம்மனை கொண்டாடி மகிழ்கின்றனர்

கலைமகளும் திருமகளும்
அலைமகளோடு கூடி அருள்நிறை பூத்தூவி
ஆனந்த கூத்தாடுகின்றனர்

தெய்வங்கள் யாவும் எங்கள் தேவனைப் போற்ற...

தேவதேவர்களும் தேவதைஎழில் பிரியங்களும்
வான் மாரி மலர் தூறி
வசந்தபொன்விழா எடுக்கின்றனர்..என் செல்வனை வாழ்த்த

தங்கை மகனாய் பிறந்தாலும்
அலைபேசி எடுத்தவுடன்

பெரியம்மா என்று நீஅழைக்கும் போதெல்லாம்
நானும் தாய்மையடைகிறேனடா
உன்னை ஈர விழிகசிய மனம் சுமந்து.....

முகநூல் அறிமுகமாகி

இன்னும் முகம் பார்க்காத என்னை.....

அக்கா....உடன்பிறப்பே..
ஓருயிரின் இரு பிறவியே
என்றழைத்து ..அகம் நெகிழ

அன்னைதந்தை தந்தாள்
தங்கை தமையன் தந்தாள்

அருமையான தாய்வீடும் தந்தாள்

அப்படியே அவன் மகன் தூக்கி .நம் மகனென்று..என் கரமும் தருகிறாள்

என்னவென்று சொல்வேனடி
உன் அன்பை....

என்ன நான் பதில் தருவேன்
எனதன்பு நேசம் தவிர.....

வான்நிறை வெற்றி குமித்து
வாழவேண்டும் நம் திருமகன் நம் ஆயுளும் சேர்த்து

இமையணைத்து ஆசீர்வதிக்கிறேன் செல்லமே

அன்னை அருளுடன் வாழ்க நீஆயுள் கோடி ஆண்டு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..