Saturday 14 March 2015

மா தவ................ மாதவமே

கருவில் எழிலாகி
கள்ளிப்பால் தனில் தப்பி
கன்னியென இனச்சுடரேந்திய
மா தவ....மாதவமே
மண்பிறவி புண்ணியமே
சுழலும் பூமியின் சூட்சம அடையாளமே
வீர ஆண்மையின் வெற்றி ஆதாரமே

பிறக்க வேண்டும் மண்ணில்
தவம் செய்து...மங்கையென
பிறவியெடுத்த ஒவ்வொரு மங்கையும்
பெருமை உணர்வாள்...
நிமிட நொடியும்...மெழுகேந்தி
வலியோடு வாகை சூடும் பெருமித வாழ்வில்

ஆண்மைப் போற்றுதலிலும் தூற்றுதலிலும்
அசையாமல் நிற்கும் திண்ணிய அணுப்பிழம்பே

கொண்டாடும் அப்பா
அடக்கியாளும் கணவன்
மடியாடும் பிள்ளை
சுழலாடும் தன் வாழ்வை...
ஆண்மை மூவர் அடையாளமாய்
முன்நிறுத்தி...தன் உணர்வு தன்னலம் மறக்கும் தலைமகளே

அசையா பூமி முதல்...
ஆடி வரும் நதி வரை...அன்னை அவனி
அச்சாணியிடும் ஆலிங்கன வேள்வியே

அடித்து மிதிக்கும் ....பிள்ளைக்கும் தாய்
தலைகனமாய் தன்மானம் சீண்டிய போதும்
தனித்து செயல்படாது...சிரித்து வாழ்வு நகர்த்தி
மடியேந்தா கணவனுக்கும் மறுதாய்
ஐந்துவயதிலேயே ..இடுப்பு தூக்கி சுமக்க
உடன்பிறந்தவனுக்கும் இமைத் தாய்

மென்மை நீயென்று மேன்மை கொண்டாடியே
கரு வேரறுக்கும் ஆண்மையின் அடிவேர்தாங்கும்
வேறில்லா நிலமே

அன்னை இழந்தவன் அனாதை
மகள் இழந்தவன் மாற்றாந்தாய் அற்றவன்
மனைவி இழந்தவன் சகலமும் போனவன்
எனும் சக இன சக்திநிறை வழிவாழ்வே

மாதம் மூன்று நாளென
வலிதரும் உதிர சுழற்சியை
வரம் தரும் தாய்மையென ......
உடல் தவ மேந்தி ..
தீஞ்ச உயிர் குருதி மணம் சுவாசிக்கும்

கருமேன்மையே...என்றும் நின் பெருமையின்

பேரின்ப அடையாள ஆதூரம்
பொறுமை...சகிப்பு ...தியாக...
தன்னலமற்ற....உணர்வு நேர்மையே

என் இன மங்கைகளுக்கும்.....
சக இன மங்கைகளை.....சக மனிதமாய் நேசிக்கும்
தாயுமானவர்களுக்கும்......

இனிய ...பொதுமையர் தின வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..