Monday 2 March 2015

நெருங்கி நெருங்காத


என் இமை
அவள் உதடு

அவள் தோள்
என் இதழ்

நெருங்கி
நெருங்காத

’இடை’ பட்ட
மில்லி மீட்டர்

’இடை’ வெளியை
இடித்து

இடம் நிரப்பிக்
கொண்டுள்ளதடி

உன் என்
மூச்சுக்களும்
முத்தங்களும்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..