Tuesday 3 March 2015

மனோ தைரியப் பூ மகள்

தமிழன்னை மடிபிறந்து
மொழிப்பால் அருந்தி
எழுச்சியும் நெகிழ்ச்சியும்
நெஞ்சணைக்க

தமிழ் தவிர
மாற்றுமொழி புகுத்தாமல்
கவிவரையும் கலைமகள் அரிதாரம்
தமிழச்சியின் அழகு அவதாரம்

படைப்பாற்றல் பரபிரம்மங்களாய்
வேரூன்றி வெற்றியாடும்
ஆண்மை நிறை களத்தில்
ஆணிவேர் பெண்மையாய் நங்கூரமிட்டு
தமிழ் மடி தவழும் மனோ தைரியப் பூ

கவிக்குயிலாய் சரோஜினி பின்
களமிறங்கி திரை
வீர வெற்றி அணைத்த திமிர் மகள் நீ

உம்
பலமும் பலவீனமும்
மொழியாகிப் போனதோ

பாரதி முதல் உன் வரை
உணர்வுக் கொந்தளிப்பு
இலக்கியவாதிகளுக்கு

இல்லறக் காதலென்பது

கண்ணம்மா போன்ற கானல் நீர் தானோ

உயிர்தமிழே உனை
உளமாறநேசிப்பது..வரமா.. சாபமா

கூத்தாடிகள் கும்மாளம் கொட்ட
வீதியில் இறக்கி வேடிக்கை பார்க்கிறாயே
வீரத்திருமகள்.....மன....மணவியலை

விமர்சிக்கும் கோமாளிகள்
விடுதலை வாழ்வில்லா
சுதந்திர செருப்படி அடிமைகளே
திரும்பாதே திமிர் கோழைகள் பக்கம்

சரித்திரமாக பிறந்த தமிழ் மகளே
உன் வாழ்வில்
இஃதும்
ஓர் ..சோதனை தரித்தரமே

வென்று வா.....இல்லை
நின்று....விலகி...கடந்து வா....
நடப்புசூழ்நிலை,...சுழலை
மன வாகைசூடி

காத்திருக்கிறாள்
உன்சிந்தைகருவேந்தி
உனை மடியேந்தி தாலாட்ட

ஏகாந்த பெருவெளியில்

எம் கவித் தாய்மை....!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..