Saturday 14 March 2015

குறளமுத கவி...500

ஒருபடி இரு படி என
முப்படி முப்பது தொட்டு
ஈரைம்பதோடு கட கடவென
ஐ நூறு படிஏறி.....
அவகாசமின்றி திரும்பி பார்க்க

மலைப்பாய் தான் இருக்கிறது
மலையோங்கிய ...குறளமுதக் கவி

எங்கள் ஆசான் இரா. குமார்
தான் பருகிய குறள் அமுதத்தை
எழில் கொஞ்சும் கவியாக்கி
தமிழ் மிஞ்சும் நளினமிட்டு
மொழிவழித் தலைமுறை
எளிமை இனிமையாய்...செம்மொழியாம்
தொன்மைத்தமிழை
வியந்து உருகி வாசித்து நெகிழ ...
போர் தொடுத்த சீர் முறை மரபுச் சிந்தனை

புதுக் கவியா...புகு கவியா
சிற்பக் கவியா...சீர்வளக் கவியா
என்றே
செந்தமிழாய் பயின்றோர் செம்மை
செழுமை வார்த்தை கண்டு வியக்க
பைந்தமிழாய் பயின்றோர்
பதவிசு கண்டு பாராட்ட

வீரத்தமிழாய் பயின்றோர்
மீசை முறுக்கி திமிராட
கன்னித்தமிழாய் களம்நாடி
களவாடினோர்...கனிந்து சிரிக்க

நாவில் ஆடும் சரஸ்வதியை..
நற்றமிழிலால் சலங்கைபூஜை செய்து
பொய்யாமொழியோனின் ...குறளடி பணிந்து
கட்டுக் கோப்பாய் அவனுக்கு கவிச்சிகர வழி படைத்து
முப்பால் இனிமையை..முத்தமிழ் தேன் குழைத்து
முக்கனிசுவையாய் அள்ளி வழங்கி வரும்
அற்புத பேராற்றலுக்கு ....
அன்னைத்தமிழுக்கு
இச் சொல்லின் செல்வர் செய்யும் அரிய தொண்டிற்கு

கை தட்டி ..கரம் வணங்கி...சிந்தை குளிர
விரலிணைத்து உடன் நின்று தினம் படித்து
திகட்ட திகட்ட மொழி ருசித்து......
கசிந்துருகும் கலாரசனை தோழமைகளுக்கு

எங்கள் ஆசான் மற்றும் என் சார்பில்.
என் மனம் கனிந்த நன்றியும் வணக்கங்களும்.....

கருத்திடலும்....புரிந்து வாதிடலுமே
என்றும் ஓர் கலைஞனுக்கு

உற்சாகம் தரும் உவகை ஆஸ்கர் விருது

தொடர்வோம் தொட்டிழுப்போம்.....

காப்பிய காவிய கோவில் சேர
தேரோடும் வீதிவழி
வெகுண்டெழுந்து வீரநடைபோட்டு
சிங்காரமிட்டு அன்ன அழகு பயிலும்

ஆனிப்பொன் குறளமுத கவித்தேரை

நன்றி தோழமைகளே..........!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..